நிர்வாணமாக வாழும் மக்களின் விசித்திரக் கிராமம் வெளிச்சத்தில்

அமேசன் காட்டின் பிரேசில் மற்றும் வெனிசுலா எல்லையில் கிட்டத்தட்ட 35000 பழங்குடி மக்கள் வாழ்வதாக கண்டியறியப்பட்டுள்ளது.

அமேசன் காட்டிற்கு மேல் பயணித்த விமானத்தில் பயணித்த நபர் ஒருவரினால் பெற்றுக் கொள்ளப்பட்ட புகைப்படங்கள் மூலம் இந்த தகவல் வெளியாகியுள்ளது.

யானோமி என்ற பழங்குடி மக்களே குறித்த புகைப்படத்தில் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

புகைப்படம் எடுக்கப்பட்ட கிராமத்தில் கிட்டத்தட்ட 100 மக்கள் வாழ்வதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

குறித்த மக்கள் சிறிய அளவிலான ஆடைகளை மாத்திரம் அணிந்துள்ளதாகவும், மேலும் சிலர் நிர்வாணமாகவும் வசிப்பதாக தெரியவந்துள்ளது.

இந்த கிராமத்தில் வெளி நபர்கள் கால் தடங்கள் பதிவாகவில்லை என கருதப்படுகின்றது.