கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா படத்தின் வெற்றி விழா விருந்து நிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் கும்மாளம் என களை கட்டியது. இந்தப் படம் கடந்த நவம்பர் 11-ம் தேதி வெளியானது. கௌதம் மேனன் படமாச்சே என்ற எதிர்ப்பார்ப்பில் போனவர்களுக்கு பெரும் ஏமாற்றத்தைக் கொடுத்த படம் இது.

ஆனாலும் படம் பெரும் வெற்றிப் பெற்றுவிட்டதாக அறிவித்துள்ளனர். அதைக் கொண்டாட ஒரு பெரிய பார்ட்டிக்கும் ஏற்பாடு செய்திருந்தனர், நட்சத்திர ஹோட்டல் ஒன்றில், விடிய விடிய நடந்த இந்த விருந்தில் நடிகைகள் ரம்யா கிருஷ்ணன், த்ரிஷா, வரலட்சுமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். அனைவரும் தவறாமல் சிம்புவுடன் நெருக்கமாக அல்லது கட்டிப்பிடித்தபடி செல்ஃபி எடுத்து ட்விட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராமில் பதிவேற்றி மகிழ்ந்துள்ளனர். த்ரிஷாவும் வரலட்சுமி சிம்பு ஏகத்துக்கும் புகழ்ந்துள்ளனர். ‘வாவ் எஸ்டிஆர்… ஆஸம்… சான்ஸே இல்லை…’ என்பதாக அந்த புகழ் ட்வீட்கள் அமைந்துள்ளன.