கண்டி – கல்ஹின்னை பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவமொன்று நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இன்று அதிகாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இந்த துப்பாக்கிச் சூட்டில் இரண்டு முஸ்லிம் வாலிபர்கள் படுகாயமடைந்துள்ளனர்.

இவர்கள் இருவரும் 14 வயதான முபீத் மற்றும் 20 வயதான நாஸிர் என்போர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த நிலையில் காணப்பட்ட இரண்டு வாலிபர்களையும் பிரதேச வாசிகள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.

எனினும் இவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தற்போது உறுதிப்படுத்தப்படாத தகவல் ஒன்று தெரிவிக்கின்றது. என்ன காரணத்திற்காக தாக்குல் சம்பவம் நடைபெற்றது என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.