இலங்கையின் வீதிகளை கடவைகளை கடக்கும் மஞ்சள் கடவைகளின் நிறம் மாற்றப்படவுள்ளது

இந்த பணிகள் அடுத்த வாரம் கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் ஏனைய பகுதிகளுக்கும் விஸ்தரிக்கப்படவுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

இதன் அடிப்படைலேயே மஞ்சள் கடவையை வெள்ளையாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்படுகிறது என்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் நிஹால் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.

பனிபொழிவைக்கொண்ட நாடுகளிலேயே வீதிகளை கடக்க மஞ்சள் கடவைகள் பயன்படுத்தப்படுகின்றன.

ஏனைய நாடுகளில் வெள்ளைக்கடவைகளே பயன்படுத்தப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.