இலங்கையில் இன்று முஸ்லிம் மக்கள் ஒரு இக்கட்டான சூழ்நிலையில், அதாவது பெரும்பான்மை சமூகத்தினரால் எவ்வேளையிலும் எதுவும் நடக்கலாம் என்று இருக்கும் இத் தருவாயில் முஸ்லிம் மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.

இவ்வாறான சூழ்நிலையில் மடவளை நியூஸ் எனும் செய்தி இணையத்தளம் முஸ்லிம் மக்களிடயே பிரிவினையை உருவாக்கி, பணத்துக்கும் பதவிக்கும் சோரம் போய் உள்ள ஒரு நிலையை காணலாம்.

அதாவது வன்னியை சேர்ந்த அமைச்சரினால் இன்று பல இணையத்தள‌‍ங்களும், ஊடகவியலாளர்களும் பணம் கொடுத்து வாங்கப்பட்டுள்ளனர்.

முஸ்லிம் மக்களின் பிரதான கட்சியான ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை ‍‌‍அழிக்க முற்படும் இந்த அமைச்சரின் பணத்துக்கும் பதவிகளுக்கும் இந்த இணையத்தளம் சேரம் போய் உள்ளதை காணலாம்.

முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக பல பொய்யான கடடுக்கதைகள் பணத்திற்கு சோரம்போன ஊடகவியலாளர்களால் எழுதப்பட்டு, அல்லது அவர்களே அவ்வாறான சூழ்நிலை ஒன்றை ஏற்படுத்தி இந்த இணையத்தள‍‌‍ங்களினுடாக பரப்பி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துகின்றனர்.

மடவளை நியூஸ் செய்தி இணையத்தளம் தொடர்பாக பெரும்பான்மையான முஸ்லிம் மக்கள் தமது ஆதங்கத்தை வெளியிட்டுள்ளனர்.

ஊழல் மற்றும் அடிதடிக்கு பெயர் போன இந்த வன்னிஅமைச்சர் ஒரு அசிங்கமான அடாவடித்தனமான அரசியலை தனது பணத்தினால் உருவாக்கியதை பெரும்பான்மையான மக்கள் எதிர்கின்றனர்.
“அகில இலங்கை சமாதான அமைப்பு”

 

இது ஒரு facebook பக்கத்தில் இருந்து பெறப்பட்டது.