நான்காவது மாடியில் இருந்து கைக்குழந்தையை தூக்கி வீசிக் கொன்ற இந்தியப் பெண் அமெரிக்காவில் கைது…

11817241_1041919655827526_4048486333030716828_n

அமெரிக்காவின் நியூ யார்க் நகரின் புறநகரான ரிச்மாண்ட் ஹில்ஸ் பகுதியில் உள்ள வீட்டின் நான்காவது மாடியில் இருந்து பிறந்து மூன்று வாரங்களே ஆன ஆண் குழந்தையை கீழே தூக்கியெறிந்துக் கொன்ற இந்தியப் பெண்ணை போலீசார் இன்று கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் அந்த குழந்தையை பிரசவித்த ரஷிதா சவுத்ரி என்ற அந்தப் பெண், பேய், பிசாசு சேட்டைகளில் இருந்து பாதுகாக்கவே அந்த குழந்தையை கீழே தூக்கி வீசியதாக போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சுமார் 40 அடி உயரத்தில் இருந்து தூக்கி வீசப்பட்ட அந்தக் குழந்தை சம்பவ இடத்திலேயே துடிதுடித்து, ரத்த வெள்ளத்தில் உயிரிழந்தது.

உள்ளூர் நேரப்படி நேற்று அதிகாலை சுமார் 4 மணியளவில் நடைபெற்ற இந்த கோரச் சம்பவம் பற்றி கருத்து தெரிவித்த அக்கம்பக்கத்தில் குடியிருப்போர், அந்தப் பெண் மனநிலை பாதிக்கப்பட்டவராக இருக்க வேண்டும். இல்லையென்றால், பால்மணம் மாறாத அந்த பச்சிளம் சிசுவை கொல்ல துணிந்திருக்க மாட்டாள் என கூறுகின்றனர்

11817241_1041919655827526_4048486333030716828_n11836871_1041919665827525_3447736899542474230_n