செப்டம்பர் மாதம் 24ம் திகதி யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் தொடர்பில் சிலர் தவறான விளக்கங்களை வௌிப்படுத்தி வருவதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று ஏற்பாடு செய்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்திருந்தார்.

குறித்த தவறை திருத்தி விடயங்களை தௌிவு படுத்துவதற்காக தாம் இந்த ஊடக சந்திப்பை ஏற்பாடு செய்ததாக அவர் மேலும் தெரிவித்தார்.

தவறான விளக்கங்களால் தென் பகுதி மக்களினுள் தவறான எண்ணங்கள் விதைக்கப்படுவதாக அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.