உலகத்தை அபகரிக்க திட்டங்களை தீட்டி அடிக்கடி இந்த உலகிற்கு வந்து போவதாக கூறப்படும் மாற்றுகிரகவாசிகளைப்பற்றி அவ்வப்போது தகவல்கள் வந்துக்கொண்டிருந்தாலும், அவர்களைப்பற்றிய எந்தவிதமான ஆதாரப்பூர்வமான விபரங்களையும் நம்மால் உறுதிபடுத்தமுடியாதுள்ளது.

இருப்பினும் அவர்களின் வருகையை மறுக்கமுடியாது என்ற நிலைப்பாட்டை வானசாஸ்திர அறிஞர்களும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றார்கள்.

ஏன் இயேசுவும் புத்தரும் கூட இதனை எதிர்வுக்கூறி இருக்கின்றார்கள்.

இதனை இவ்வுலகில் வாழும் நாமும் ஏற்றுக்கொண்டுதான் இருக்கின்றோம்.

பொதுவாக இப்பொழுது நாம் வாழும் உலகிற்கு அழிவு வந்துக்கொண்டு இருப்பதாக தற்பொழுது செய்திகள் வந்தவண்ணமேயுள்ளது. அண்மையில் சீனாவின் வானிலை ஆராச்சியானர்களின் கூற்றுப்படி சுமார் 15 கிலோ மீட்டர் நீளமுள்ள பெரிய வான்கல்லொன்று 60000 கிலோ மீட்டர் வேகத்தில் பூமியை நோக்கிவருவதாகவும், அது இந்த பூமியை தாக்கினால் 3000 கோடி அணுகுண்டால் ஏற்படப்போகும் அழிவுகளை கொண்டதாக இருக்குமென கூறப்படுகின்றது.

இது விஞ்ஞான ரீதியான தகவலாகும். அதே நேரம் அன்மையில் தமிழ் நாட்டின் தனியார் தொலைகாட்சிக்கு பேட்டியளித்த கணனி பட்டதாரியான ஒருவர் தெரிவிக்கும் செய்தி நம்மை அதிர்ச்சியடையவைத்துள்ளது.

ஆம் அவரின் கூற்றுப்படி நாம் வாழும் உலகை வேற்றுகிரகவாசிகள் ஆக்கிரமித்துக்கொள்ள பல்வேறு திட்டங்களுடன் இந்த உலகிற்கு வந்துக்கொண்டிருப்பதால், அந்த சமயங்களில் இவ் உலகத்தை பாதுகாத்து வரும் சித்தர்கள் நம்மை பாதுகாத்து அவர்களை விரட்டியடிப்பதாகவும், அதன் காரணமாகவே நாமும் உலகும் காப்பாற்றப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கின்றார்.

இருப்பினும் தற்போது உலகில் மனிதர்களிடையே தியான சக்கி மிகவும் குறைவடைந்து வருகின்றபோதும் ஜப்பானிய மக்களிடம் இன்னும் தியான சக்தி குறைவடையவில்லையெனவும், அவர்கள் விஞ்ஞான ரீதியாக பல்வேறுப்பட்ட சாதனைகளை புரிந்தபோதும் மனித சக்திக்கும்மேல் ஓர் சக்தி இருக்கின்றது அதுவே உலகத்தை கட்டுப்பாட்டில்வைத்துக்கொண்டு செயல்படுகின்றது என்பதை உணர்ந்தவர்களாக இருப்பதாகவும் கூறுகின்றார்.

அந்த சக்தியை கண்டுபிடிக்க தியானமே மிக முக்கியம் என்ற காரணத்தாலேயே அந்நாட்டு மக்கள் விஞ்ஞான ரீதியான முன்னேற்றத்துடன் தியானத்தையும் அதிகமாக கடைபிடிப்பதாகவும், இதை சித்தர்களும் நன்கு அறிந்துள்ளதாகவும், தெரியவந்துள்ளது.

அதே போல் மாற்றுகிரகவாசிகளுக்கும் தெரியுமெனவும், அதனால் மாற்று கிரகவாசிகளின் வருகை ஜப்பான் நாட்டின் பிரதேசமே இலக்காக இருப்பதால் சித்தர்கள் இவ்வாறான பூகம்பத்தை ஏற்படுத்தி அவர்களை விரட்டியடிப்பதாகவும் குறிப்பிடுகின்றார்.

இவ்வாறான விடயங்கனை நாம் நம்புவதில்லை என்றாலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பே குறிப்பிட்ட சில ஊடகங்களில் வெளிவந்த சில ஆபத்தான விடயங்கள் தற்போது நடந்தேரியுள்ளது என்பதை மறுக்க முடியாது.

இந்நிலையில் நமது நாட்டின் பெருபான்மை மக்களின் கடவுளாகிய கௌதம புத்தப்பெருமான் தனது தியான சக்தியாலேயே உலகத்தில் நடக்கப்போவதை பற்றி எதிர்வு கூறினார். அதேபோலவே யேசுநாதரும் குறிப்பிட்டுள்ளார்.

இவைகளை நாம் நம்புகின்றோம்.

அந்த வகையிலேயே இதுபோன்ற விடயங்களை நாம் அனுக வேண்டும் அப்படியாகவே வரும் காலத்தில் இவ்வுலகம் அழியுமேயானால் அதற்கு மாற்று இடமாக செவ்வாகிரகம் இருக்குமாம்.

இந்த உலகை கைபற்ற மாற்றுகிரகவாசிகளின் செயல்பாடுகளினாலும் மனிதர்களின் தியான சக்தி குறைவினாலும் இவ்வுலகத்தை கைபற்றபோவது மாற்று கிரகவாசிகளே அதன் காரணமாக நாம் இந்த பசுமை நிறைந்த உலகை இழக்கலாம் .