அண்மையில் நடந்த அமைச்சரவை மாற்றத்தின் பின் அமைச்சர்களுக்கான பொறுப்புகளை வழங்கியபோது தேசிய லொத்தர் சபையும், அபிவிருத்தி லொத்தர் சபையும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சரான ரவி கருணாநாயக்கவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

விசேட வர்த்தமானி அறிவித்தலொன்றின் மூலம் இந்தப் பொறுப்பு ரவி கருணாநாயக்கவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், அதே வர்த்தமானி அறிவித்தல் மூலம் இதுவரை வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் செயற்பட்டுவந்த அரச அச்சகத் திணைக்களம், தேசிய திரைப்படக் கூட்டுத்தாபனம், அரச அச்சகக் கூட்டுத்தாபனம் ஆகிய மூன்றும் அரச பரிபாலன மற்றும் முகாமைத்துவ அமைச்சுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இந்த விசேட வர்த்தமானி அறிவித்தலின் கீழ் நிதி மற்றும் வெகுஜன ஊடக அமைச்சுக்குக் கீழ் வரும் அரச நிறுவனங்கள் வருமாறு:-

திறைசேரி, அரச நிதிக்கொள்கைத் திணைக்களம், தேசிய வரவுசெலவுத் திணைக்களம், அரச நிதித் திணைக்களம், திறைசேரி செயற்பாட்டுத் திணைக்களம், அரச கணக்குத் திணைக்களம், வர்த்தக மற்றும் முதலீட்டுக் கொள்கைத் திணைக்களம், அபிவிருத்தி நிதித் திணைக்களம், தொழில்நுட்ப முகாமைத்துவ மற்றும் தகவல் திணைக்களம், சட்ட அலுவல்கள் திணைக்களம், உள்நாட்டு இறைவரித் திணைக்களம்.

அரச மதிப்பீட்டுத் திணைக்களம், முகாமைத்துவ சேவை திணைக்களம், இலங்கை சுங்கம், கலால் திணைக்களம், இலங்கை காப்புறுதித் திணைக்களம், இலங்கை நிறுவை மற்றும் எடைகள் தரக் கட்டுப்பாட்டுத் திணைக்களம், இலங்கை ஏற்றுமதிக் கடன் காப்புறுதி கூட்டுத்தாபனம்.

தகவல்கள் திணைக்களம், இலங்கை பத்திரிகைகள் சபை, இலங்கை ரூபாவாஹினி கூட்டுத்தாபனம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், சுயாதீன தொலைக்காட்சி நிறுவனம், இலங்கை ரூபவாஹினி பயிற்சி நிலையம், லோஹோர் சீமாட்டி நிதியம், வரி மேன்முறையீட்டு சபை, ராஜபக்ஷ தேசிய தொலைக்காட்சி நிறுவனம் ஆகியவையாகும்.