அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற ரி-ருவென்டி கிரிக்கெட் போட்டியொன்றில் இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் அணி வெற்றி பெற்றுள்ளது.

கடந்த மாதம் 13ம் திகதி நடைபெற்ற போட்டித்தொடரின் இறுதிப் போட்டியில் வெற்றி பெற்று இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் அணி சம்பியனாகி உள்ளது.

கெரி பெக்கர் உலகக் கிண்ண போட்டித் தொடர் 40 வருடங்களாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் கலந்து கொண்ட இலங்கை புகலிட கோரிக்கையாளர்கள் அணியே இந்த வெற்றியை பெற்றுள்ளது.

எனினும் இந்த அணியில் விளையாடிய வீரர்கள் சர்வதேச போட்டிகளில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்குமா என்பது தொடர்பில் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.