கிளிநொச்சி ஏ 9 வீதியில் புதுக்காடு பிரதேசத்தில் நேற்று இரவு இடம்பெற்ற வாகன விபத்தில் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு பயணிகளை ஏற்றிச் சென்ற கயஸ் வாகனமும் கிளிநொச்சியில் இருந்து வந்த பிக்கப் வாகனமும் நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்திருப்பதாக பளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்துக்குள்ளானவர்கள் நால்வரும் பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருப்பதோடு குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை பளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.