யாழ். குடாநாட்டு சந்தைகளில் இரசாயன மருந்துகள் விசிறப்பட்டு பழுக்க வைத்த பழங்கள் விற்பனை செய்யப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த விடயம் பொது மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது மாம்பழம் மற்றும் பலாப்பழம் போன்றவற்றின் பருவகாலம் ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில், சந்தைக்கு அதிகளவான மாம்பழங்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகின்றன.

இந்நிலையில, திருநெல்வேலி, சுன்னாகம், மருதனார்மடம், சங்கானை, கொடிகாமம், சாவகச்சேரி, போன்ற சந்தைகளுக்கு கொண்டு வரப்பட்டும் பழங்கள் இரசாயன மருந்து விசிறப்பட்டு பழுக்க வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த பழங்களை மக்கள் விரும்பி வாங்கிச் செல்வதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இதன் காரணமாக அதிகளவான தொற்று நோய்கள் ஏற்பட கூடிய வாய்ப்புகள் காணப்படுவதாகவும் கூறப்படுகின்றன.

எனவே, இந்த விடயம் குறித்து சுகாதார துறையினர் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.