நீதிபதி இளஞ்செழியனுக்கு புனர்வாழ்வளிக்க முற்பட்ட வவுனியா ஜக்சன் யாழ் நீதிமன்றத்தில் மடக்கப்பட்டார் முகநூலில் நீதிபதி இளஞ்செழியனுக்கு புனர்வாழ்வளிக்க வேண்டும் என்ற தோரணையில் பதிவுகளை மேற்கொண்டு வந்த நபர் ஒருவர் இன்று (23.11.2016) யாழ்ப்பாணத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தன்னுடைய முகநூலில் நீதிபதிகள் தொடர்பாக பதிவிட்டு வந்த குறித்த நபர் வேறொரு வழக்குக்காக யாழ்ப்பாண நீதிமன்றுக்கு வந்த போதே கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

இவர் வவுனியாவில் 200 கோடிக்கு தனது கண்டு பிடிப்பை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்றதாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்து உலகப் புகழ் பெற்றவராவார்.