அண்மையில் ஏற்பட்ட இயற்கை அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்பும் நோக்கில் வட மாகாண சபை உறுப்பினரும், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் யாழ். மாவட்ட அமைப்பாளருமான அகிலதாஸ் நிதியுதவி வழங்கியுள்ளார்.

வடக்கிலிருந்து தெற்கு நோக்கி நிவாரணப் பொருட்களைக் கொண்டு வந்த மக்கள் தொடர்பாடல் மனிதாபிமான ரயில் செயற்திட்டத்திற்கு பங்களிப்பு செய்யும் வகையில், ஒரு இலட்சம் ரூபா நிதிக்கான காசோலையை நேற்று வட மாகாண ஆளுநர் அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடம் இவர் கையளித்தார்.