இராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தனவின் மகனை கைது செய்யுமாறு சற்று முன் பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

வாகன விபத்து தொடர்பில்தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் முன்னிலையாகாமையாலேயே இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு போக்குவரத்து நீதிமன்றத்தால் இந்த உத்தரவு இன்றைய தினம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் இடம்பெற்ற வாகன விபத்து தொடர்பில்,ஒசந்த யாப்பாவுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.

இதற்கிணங்க, ஒசந்த யாப்பா அபேவர்தனவை கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கொழும்பு போக்குவரத்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், இந்த வழக்கு எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 3 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.