செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள உருக்காமம் கிராமத்தின் வளாகத்திற்குள் நேற்று இரவு புகுந்த யானை அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றை முற்றாக சேதப்படுத்தியதோடு, அங்குள்ள பயிர்களையும் சேதப்படுத்திச் சென்றுள்ளது.

குறித்த சம்பவத்தின்போது வீட்டில் இருந்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதுடன் உடைமைகள் அனைத்தும் யானையால் சேதப்படுத்தப்படுள்ளன.

சரியான முறையில் பாதுகாப்பு வேலி இல்லாத காரணத்தினால் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வாழ்வதாக குறித்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவித்துள்ளனர் .

மேலும் இதுபோன்று இன்னுமொரு சம்பவமோ அல்லது உயிர் மற்றும் உடைமை சேதங்கள் ஏற்படும் முன்னரோ மக்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.