சிங்கபூரில் இருந்து சென்னைக்கு வந்த இலங்கை தமிழர் ஒருவர் மீண்டும் சிங்கபூரிற்கு திருப்பி அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

செல்வநாயகம் முனியாண்டி என்ற இலங்கை தமிழர் சிங்கபூரில் இருந்து இன்று சென்னை சென்ற நிலையில், அவர் சென்னை விமான நிலையத்தில் வைத்து தடுத்து நிறுத்தப்பட்டார்.

இதனையடுத்து இந்திய மத்திய புலனாய்வுப் பிரிவினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசாரணைகளையடுத்து, குறித்த நபர் விடுதலைப் புலி உறுப்பினர் என தெரிவித்து மீண்டும் சிங்கபூரிற்கு அனுப்பட்டுள்ளதாக இந்திய ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.