யாழ். – சாவகச்சேரி பகுதியில் இன்று இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் நான்கு இளைஞர்கள் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து தனங்கிளப்பு பகுதியில் மோட்டார் சைக்கிள்கள் இரண்டு ஒன்றுடனொன்று மோதிக் கொண்டதால் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் வட்டுக்கோட்டையை சேர்ந்த நான்கு இளைஞர்களே படுகாயமடைந்துள்ளாக கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காயமடைந்த நால்வரும் சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், இருவர் யாழ். போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.