ஈழத்தமிழர்களின் நியாயத்தை உலக அரங்கில் ஓங்கி ஓலித்த பெல்ஜீயம் நாட்டை சேர்ந்த மார்க்சீய அறிஞரும், எமிரேட்ஸ் பேராசிரியருமான 92வயது பிரான்சுவா ஹுட்டார்ட் கியூட்டோவில் கடந்த வியாழன் கிழமை அன்று உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

2009ல் சிறிலங்கா பேரினவாத அரசு கொத்து கொத்தாக தமிழினப்படுகொலை செய்யப்பட்டபோது உலக அரங்கில் முதன்முதலில் இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இனப்படுகொலை’ செய்கிறது என்று சொன்னவர் இவராவார்.

2009ல் இலங்கை அரசு ஈழத்தமிழருக்கெதிராக நடத்தியது நன்கு திட்டமிடப்பட்ட ஒரு ’இனப்படுகொலையே” என்று உலக அரங்கில் முதன்முதலில் ஏற்றுக்கொண்டது 2013 டிசம்பரில் ஜெர்மன் நாட்டில் பிரேமன் நகரில் நடந்த மக்கள் தீர்ப்பாயமே.

அந்த மக்கள் தீர்ப்பாயத்தை உருவாக்கியவர்களின் முக்கியமானவர் பேராசிரியர் பிரான்சுவா ஹுட்டார்ட் ஆவர்.

இந்த தீர்ப்பாயத்தில் தான் முதன்முதலாக ஈழத்தமிழர்களை இலங்கை அரசு ’இனப்படுகொலை’ செய்திருக்கிறதென்றும். இந்த இனப்படுகொலையில் அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் பங்காற்றியிருக்கின்றன என்றும் ஆதார பூர்வமாக நிறுவப்பட்டு தீர்ப்பு கொடுத்தார்கள்.

இந்த ஜெர்மன் தீர்ப்பாயத்தில் இந்தியாவின் பங்கு குறித்து பேசியவர் மே17 இயக்கத்தின் சார்ப்பில் அதன் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி.

பேராசிரியர் பிரான்சுவா ஹுட்டார்ட் தனது இறுதி காலம்வரை அரச ஒடுக்குமுறைகளுக்கு எதிராக போராடியவர். தனது வாழ்வின் பெரும்பகுதியை ஆசிய, ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளிலுள்ள ஏழைகள் உழைக்கும் மக்கள் நிலமற்ற விவசாயிகள் போன்றோர்களின் முன்னேற்றத்திற்காகவே உழைத்தார்.

குறிப்பாக லத்தீன் அமெரிக்க நாடுகளின் சமூக பொருளாதார முன்னேற்றதில் பெரும்பங்கு வகித்தார். அதனால் தான் லத்தீன் அமெரிக்க நாடுகளின் தலைவர்களான மறைந்த கியுபாவின் அதிபர் பிடல் காஸ்ட்ரோ மற்றும் மறைந்த வெனிசூலாவின் அதிபர் சாவேஸ் போன்றோர்களுடன் நெருக்கமாக இருந்தார்.

எங்கெல்லாம் மனித உரிமைகள் மறுக்கப்படுகிறதோ அங்கெல்லாம் மனித மாண்புகளை காக்க தொடர்ந்து போராடிய மார்க்சீய அறிஞர் பிரான்சுவா ஹுட்டார்ட் தனது இறப்புக்கு முந்தைய நாள் தனது கடைசி நிகழ்வாக கலந்து கொண்டது ஈக்குவேடரில் ஈழத்தமிழர்களுக்காக நடந்த ஒரு கூட்டத்தில் தான்.

ஈழத்தமிழர்கள் உள்ளிட்ட ஒடுக்கப்படும் மக்களின் நியாயத்திற்காக தொடந்து போராடிவந்த பிரான்சுவா ஹுட்டார்ட்.