வவுனியா நெடுங்கேணி பகுதியில் இன்று இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதோடு மற்றுமொருவர் காயமடைந்துள்ளார்.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

தண்டுவானிலிருந்து நெடுங்கேணிக்குச் சென்றுக்கொண்டிருந்த மோட்டார் சைக்கிளுடன் வற்றாப்பளை கோவிலிலிருந்து வவுனியா நோக்கி வந்த வேன் ஒன்று நேருக்கு நேர் மோதியதாலேயே குறித்த விபத்து சம்பவித்துள்ளது.

குறித்த விபத்தின் போது தண்டுவான் பிரதேசத்தைச் சேர்ந்த 56 வயதினையுடைய நல்லையா சகுந்தலாதேவி என்பவர் உயிரிழந்ததோடு 32 வயதுடைய கனகலிங்கம் ஜனார்த்தன் என்பவர் படுகாயம் அடைந்துள்ளதுடன் குறித்த காயங்களுக்கு உள்ளான நபர் நெடுங்கேணி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் நெடுங்கேணி மற்றும் ஒட்டுச்சுட்டான் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.