அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக அரசாங்கத்துக்கு கிடைத்த உதவி பகிர்ந்தளிக்கப்பட்ட முறைமை தொடர்பாக அறிக்கையொன்றை வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின்போதே அவர் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

இதேவேளை, அனர்த்தத்தில் வீடுகளை இழந்த மக்களுக்கு வீடுகளை உடனடியாக கட்டிக்கொடுக்குமாறும் ஜனாதிபதி இதன்போது ஆலோசனை வழங்கியுள்ளார்.