பொலன்னறுவை, அரலகங்கவில பகுதியில் காட்டுயானையின் தாக்குதலுக்கு இலக்காகி நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை இடம்பெற்றுள்ளதுடன், அந்த நபர் மோட்டார் சைக்கிளில் பயணித்த போதே யானையின் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை சம்பவத்தில் உயிரிழந்த நபர் எல்லேவெவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.