சக்தி வாய்ந்த நாடாக ரஷ்யாவை உருவாக்குங்கள் என்று ரஷ்யாவின் தேசிய தினத்தில் புதினுக்கு வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஷ்யாவின் தேசிய தினம் ஜூன் 12-ம் தேதி கொண்டாடப்பட்டது. இதனைத் தொடர்ந்து ரஷ்ய அதிபர் புதினுக்கு வடகொரிய அதிபர் கிங் ஜோங் உன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

வடகொரிய அதிபர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், “ரஷ்ய மக்களுக்கு எங்களுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

ரஷ்யாவை சக்தி வாய்ந்த நாடாக அதிபர் புதின் எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் வாழ்த்துகள்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யா மற்றும் வடகொரியாவுக்கிடையான உறவை பலப்படுத்தும் நோக்கில்தான் இந்த வாழ்த்துச் செய்தியை கிம் ரஷ்ய அதிபர் புதினுக்கு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.