வர்த்தக சந்தையில் முறிகள் கொடுக்கல் வாங்கல் மூலம் நட்டம் ஏற்பட்டுள்ளதா என்பது தொடர்பில் ஆராயுமாறு ஜனாதிபதி ஆணைக்குழு கணக்காய்வாளர் நாயகத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளது.

குறிப்பிடப்பட்ட தொகையை விட அதிக விலைக்கு முறிகளை ஏலத்தில் விட்டமை முறையற்ற விடயம் என கணக்காய்வாளர் நாயகம் காமினி விஜயசிங்க இன்று ஆணைக்குழு முன்னிலையில் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஆணைக்குழுவில் அவர் தெரிவிக்கும் பொழுது,

இந்நிலையில், 40 பில்லியனை மாத்திரம் இதன் மூலம் பெற்றுக்கொண்டிருந்தால் அரசாங்கத்திற்குத் தேவையான எஞ்சிய தொகையை வங்கி மேலதிகப் பற்று அல்லது மற்றுமொரு ஏலத்தின் மூலம் குறைந்த வட்டி வீதத்தில் பெற்றுக்கொண்டிருக்க முடியும்.

இதேவேளை, இந்த ஏலத்தின் போது 142.42 பில்லியன் பெறுமதியான விலைமனு கோரலில் 77.432 பில்லியன் பெறுமதியான விலை மனுவை இலங்கை மத்திய வங்கி ஏற்றுக்கொண்டுள்ளது.

இன்று கணக்காய்வாளர் நாயகம் வெளியிட்டுள்ள தகவலின் படி மேலதிகமான 37.432 பில்லியன் விலை மனுவை பேர்ப்பச்சுவல் ட்ரஷரீஸ் நிறுவனம் பெற்றுக்கொண்டுள்ளதுடன், எஞ்சிய 40 வீதம் முதல்நிலைப் பங்காளர்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளமை தெளிவாகின்றது.