இலங்கைக்கும், நேபாளத்திற்கும் இடையில் நேரடி விமான சேவைகளை ஆரம்பிப்பது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

இலங்கைக்கான நேபாள தூதுவர் பேராசிரியர் பிஸ்வம்ஹார் பியக்குர்யால் இன்று இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரவி கருணாநாயக்கவை சந்தித்துள்ளார்.

வெளிவிவகார அமைச்சில் இன்று மாலை இந்த சந்திப்பு நடத்தப்பட்டுள்ளது.

இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையில் நேரடி விமான சேவை ஆரம்பிப்பது குறித்து கவனம் செலுத்தப்பட்டுள்ளது.

மேலும், இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தக மற்றும் கலாச்சார உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளுதல் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்பட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.