கல்விப் பொதுத் தராதர உயர்தரம் மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ஆகியன ஒத்தி வைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

பரீட்சைகள் ஒத்தி வைகப்பட உள்ளதாக சில தரப்பினர் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

எனினும் பரீட்சைகளை ஒத்தி வைப்பதற்கு எவ்வித அவசியமும் கிடையாது என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.

பரீட்சைகளை ஒத்தி வைக்குமாறு பொறுப்புவாய்ந்த எந்தவொரு தரப்பினரும் இதுவைரயில் உத்தியோகபூர்மாக கோரவில்லை என பரீட்சைகள் ஆணையாளர் டபிள்யூ.எம்.என்.ஜே. புஸ்பகுமார ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.

எனவே பரீட்சைகள் நேர அட்டவணையின் அடிப்படையில் மாற்றமின்றி நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 20ம் திகதி புலமைப் பரிசில் பரீட்சை நடைபெறவுள்ளது.

உயர்தரப் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 8ம் திகதி முதல் செப்டம்பர் மாதம் 2ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.

மேலும், உயர்தரப் பரீட்சையின் நடைமுறைப் பரீட்சைகள் ஒக்டோபர் மாதம் 20ம் திகதி முதல் நவம்பர் மாதம் 5ம் திகதி வரையில் நடைபெறவுள்ளது.