போரின் பின்னர் வடக்கு ரயில் பாதையில் சுமார் மூன்று கோடி பேர் பயணம் செய்துள்ளனர் என தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதுவரை வடக்கு ரயில் பாதையின் ஊடாக போருக்கு பின்னர் 29257145 பேர் பயணம் செய்துள்ளனர்.

போர் நிறைவடைந்ததன் பின்னர் இந்தப் பாதையில் பயணம் செய்த பயணிகளிடமிருந்து ரயில் கட்டணமாக 369 கோடி ரூபா பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

2009ம் ஆண்டில் வடக்கு ரயில் பாதையின் ஊடாக 2587500 பேர் பயணம் செய்துள்ளதுடன் 261301720 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளது.

2016ம் ஆண்டில் வடக்கு ரயில் பாதையின் ஊடாக 4421985 பேர் பயணம் செய்துள்ளதுடன் 718884158 ரூபா வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக இலங்கை புகையிரதத் திணைக்களம் தெரிவித்துள்ளது.