தேயிலை தோட்டத்திற்குள் புகுந்து கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக யக்கமுல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கம்பஹா மாவட்டத்திலுள்ள யக்கமுல்ல, கொட்டவகம தேவகிரி தேயிலைத் தோட்ட அலுவலகத்தில் நுழைந்து 3 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணத்தை கொள்ளையடிக்க முயன்றவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தோட்ட தொழிற்சாலையில் பணியாற்றும் ஊழியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸ் உத்தியோகபூர்வ நாயின் ஊடாக மேற்கொள்ளப்பட்ட சோதனை போது சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தேயிலை தோட்டத்திற்கு சொந்தமான அலுவலகத்தில் இருந்து 3 இலட்சத்து 88 ஆயிரம் ரூபாய் பணம் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதற்கமைய காலி பொலிஸ் நாய் பிரிவின் ஆடிஸ் என்ற நாய் அழைத்து வரப்பட்டு சோதனையிடப்பட்டுள்ளது. சந்தேக நபரினால் விட்டு செல்லப்பட்ட கடித உரை ஊடாக சென்ற நாய் வீடொன்றின் முன்னால் நின்றுள்ளது.

பின்னர் அந்த வீட்டில் வசிக்கும் நபர் இந்த அந்த தோட்ட தொழிற்சாலையில் சேவை செய்யும் ஊழியர் என தெரியவந்துள்ளது. அவரை தேடும் போது அவர் வீட்டில் இருந்து தப்பி சென்றுள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் மேலதிக விசாரணை மேற்கொண்ட பொலிஸ் அதிகாரிகளினால் பிரதேசத்தில் மறைந்திருந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.