நாட்டில் வாகன விபத்துக்கள் தொடர்ந்தும் அதிகரித்துள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு கூறியுள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

மோட்டார் சைக்கிள் மற்றும் முச்சக்கர வண்டிகள் போன்றவையே அதிகம் விபத்துக்குள்ளாகின்றது.

கடந்த இரண்டு ஆண்டுகளில் முச்சக்கர வண்டியிலேயே அதிகளவான விபத்துக்கள் நேர்ந்துள்ளதுடன் இதனால் பல உயிரிழப்புக்கள் இடம்பெற்றுள்ளது.

மேலும், வாகன விபத்துக்கள் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட உள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.