சவுதி அரேபியா வான்வெளித்தளத்தில் கட்டார் விமானங்கள் பறக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. எதற்காக இந்த தடைவிதிக்கப்பட்டது என சவுதி அரேபியா அரசு விளக்கமளித்துள்ளது.

தீவிரவாத அமைப்புகளுக்கு நிதியுதவி செய்வதகாவும், ஐஎஸ் தீவிரவாதிகளை ஊக்குவிப்பதாகவும் கட்டார் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளன.

பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் இந்த குற்றச்சாட்டுகளை கூறியுள்ளன.

மேலும் கட்டாருடனான ராஜாங்க ரீதியிலான உறவை முறித்துக் கொள்வதாகவும் அந்த நாடுகள் அறிவித்தன.

இதைத்தொடர்ந்து கட்டாருடன் கடல் மறும் வான்வழி போக்குவரத்தையும் அந்த நாடுகள் துண்டித்துக்கொண்டன.

கட்டாருடனான கதவுகள் மூடல்

தூதர்களை திரும்ப பெற்ற அந்நாடுகள் தங்கள் நாட்டு மக்கள் சொந்த நாட்டுக்கு திரும்ப வேண்டும் என்றும் கட்டார் நாட்டு மக்கள் வெளியே வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தன.

இதைத்தொடர்ந்து கட்டாருடனான சாலை வழிப் போக்குவரத்தையும் அந்நாடுகள் மூடின.

கட்டார் விமானங்களுக்கு தடை

சவுதி அரேபியா, அமீரகம் உள்ளிட்ட நாடுகள் கத்தாருடனான வான் வழிப்போக்குவரத்தை துண்டித்தன.

மேலும் சவுதி அரேபியா தங்கள் நாட்டின் வான் வெளித்தளத்தில் கட்டார் விமானங்கள் பறக்கக்கூடாது என்றும் கூறியது.

ஏன் தடைவிதிக்கப்பட்டது?

இதேபோல் பஹ்ரைன், ஐக்கிய அரபு இராச்சியம் உள்ளிட்ட வளைகுடா நாடுகளும் கட்டார் விமானங்களுக்கு தடைவிதித்தது.

இந்நிலையில் தங்கள் நாட்டின் வான்வெளித் தளத்தின் மீது கட்டார் விமானங்கள் பறக்க ஏன் தடைவிதிக்கப்பட்டது என சவுதி அரேபியா விளக்கமளித்துள்ளது.

மக்களின் பாதுகாப்புக்காக இது தொடர்பாக சவுதி அரேபியா விமான போக்குவரத்துத்துறை கூறியிருப்பதாவது,

தங்கள் நாட்டுக்கும் தங்கள் நாட்டின் குடிமக்களுக்கும் எந்த அச்சுறுத்தலும் ஏற்படக் கூடாது என்றும் மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதற்காகவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காகவும் கட்டாருக்கான வான்வெளித்தளம் மூடப்பட்டதாக தெரிவித்துள்ளது.

பஹ்ரைன், எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளும் இந்தக் காரணத்தையே தெரிவித்துள்ளன. இதைத்தொடர்ந்து கட்டார் ஏர்லைன்ஸ் நிறுவனம் சவுதி அரேபியா மற்றும் அமீரகத்தில் தனது 18 முனையங்களை மூடியுள்ளது.