இலங்கையின் ஊடக சுதந்திரத்துக்கு அரசு கடுமையான சவாலை விடுப்பதாகவும், ஊடகவியலாளர்களின் பெற்றோருக்கு மிரட்டல் விடுப்பதாகவும் மஹிந்த அணி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது.

அரநாயக்க பிரதேசத்துக்கு நேற்று விஜயம் மேற்கொண்ட அம்பாந்தோட்டை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அங்கு ஊடகவியலாளர்களிடம் கருத்து வெளியிடும்போதே மேற்கண்டவாறு கூறினார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

ஊடகவியலாளர்களின் பெற்றோரின் பெயர்களைக் கூறி ஏசும் அரசும் அமைச்சரவையுமே நாட்டில் தற்போது உள்ளன.

ஊடக சுதந்திரத்தை இந்த அரசு ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கியுள்ளது. ஊடக சுதந்திரத்தையே ஒடுக்கும் இந்த அரசு எவ்வாறு மக்கள் பிரச்சினைகள் தொடர்பான கோரிக்கைகளுக்குச் செவிசாய்க்கும்?

எமது ஆட்சியில் ஊடக சுதந்திரம் பற்றிப் பேசிய சிவில் அமைப்புகளிடம் தான் தற்போது சந்தோஷமா என்று கேட்க விரும்புகின்றோம் என சுட்டிக்காட்டினார்.