மேற்கு லண்டனில் 24 அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் பாரிய தீ விபத்து ஒன்று ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

மேற்கு லண்டன் Latimer Road வீதியில் உள்ள Blaze engulfs அடுக்குமாடி குடியிருப்பின் இரண்டாவது மாடியில் பரவிய தீ யினால் இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளதாக லண்டன் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியாளர்கள் கட்டடத்தில் உள்ளவர்களை வெளியேற்ற முயற்சித்து வருகின்றனர். சுமார் 200 தீயணைப்பு வீரர்கள் மற்றும் 40 தீயணைப்பு வண்டிகள் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளன.

அந்த கட்டடம் சரியும் அச்சம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கு தீடீரென கட்டடத்தின் மேல் வெளிச்சம் ஒன்றை காண முடிந்ததாகவும் அது விளக்கு என தாம் எண்ணியதாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

இன்று இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் காயமடைந்த இருவர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் பலர் காயமடைந்திருக்கலாம் என நம்பப்படுகின்றது.

இதேவேளை, காயமடைந்தவர்கள் அல்லது சேத விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியாகவில்லை என கூறப்படுகின்றது.