யாழ்ப்பாணம் சென்றால் இனவாதிகளைப் பிடித்துவிடலாம் என்று முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சீ.வி.விக்னேஸ்வரன் போன்றவர்களே யாழ்ப்பாணத்தில் இனவாதத்தைப் பரப்பி வருகின்றனர்.

இவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதா? இன்று சட்டத்தை அமுல்படுத்தும் தரப்பு நாம் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, இதுதொடர்பில் கருத்து வெளியிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ஸ எம்.பி,

வடக்கில் சிங்களவர்களைக் குடியேற்றம் செய்ய வேண்டாம் என்று சீ.வி.விக்னேஸ்வரன் சூளுரைக்கும் போது அரசு மௌனமாக இருக்கின்றது.

அதற்கு எதிராக தெற்கில் எவராவது குரல் கொடுத்தால் அதை இனவாதம் என்று அரசு சொல்கின்றது.

எங்கிருந்து வந்தாலும் அது இனவாதமாகும். எனவே, அதற்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றார்.