ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொழும்பிற்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

கொழும்பிற்கு நாளை இரவு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் விசேட கூட்டம் ஒன்றும் நடத்தப்பட உள்ளது.

இந்த கூட்டம் தொடர்பில் நேற்று மாலை சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த கூட்டத்திற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும், அமைச்சர்களும் பங்கேற்க வேண்டியது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

கட்சியின் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பாக ஜனாதிபதி இந்த கூட்டத்தின் போது கலந்துரையாட உள்ளதாக கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் ஒருவர் கொழும்பு ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு குறித்து சுந்திரக் கட்சியினால் உருவாக்கப்பட்டுள்ள யோசனைகள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியுடன் செய்து கொள்ளப்பட்ட புரிந்துணர்வு உடன்படிக்கை ஆகஸ்ட் மாதத்துடன் பூர்த்தியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த விடயம் குறித்தும் பேச்சுவார்த்தையில் கவனம் செலுத்தப்படும் என தெரிவிக்கப்படுகிறது.