வடமாகாண முதலமைச்சருடன், எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தொலைபேசியினூடாக அவசர கலந்துரையாடலொன்றை நேற்று மேற்கொண்டுள்ளதாக தெரவிக்கப்படுகிறது.

இதேவேளை இந்த அவசர உரையாடலில் பேசப்பட்ட விடயங்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

எனினும், இந்த உரையாடலின்போது வடமாகாண முதலமைச்சரின் செயற்பாட்டுக்கு கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கடும் கண்டனங்களைத் தெரிவித்திருக்கலாம் எனக் கூறப்படுகின்றது.

வடமாகாண சபையின் நான்கு அமைச்சர்களையும் ஒரேயடியாக மாற்றும் முயற்சியில் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஈடுபட்டுள்ளதாக பலராலும் குற்றம்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.