பண்டாரவளையின் ஒரு பகுதியில் வீடுகளில் வெடிப்பு ஏற்பட்டுள்ளதால் அனர்த்த எச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தந்திரிய பிரதேசத்திலுள்ள சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் அமைந்துள்ள நிலப்பரப்பு அனர்த்த அபாயத்துக்குரிய பகுதி எனத் தெரிவித்து, அங்குள்ள மக்களை வெளியேறுமாறு நகர சபை அறிவித்தல் விடுத்துள்ளது.

இதேவேளை அந்த பகுதியில் சில வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்களில் சில நாட்களுக்கு முன்பு வெடிப்புக்கள் ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.