தபால் சேவை ஊழி­யர்கள் பல்­வேறு கோரிக்­கை­களை முன்­வைத்து நாடு தழு­விய ரீதியில் மேற்­கொண்­டுள்ள பணி பகிஷ்­க­ரிப்­பினால் தபால் சேவை முற்­றாக ஸ்தம்­பி­த­மடைந்­துள்­ளது. நாடு பூரா­கவும் ஆறு இலட்­சத்­திற்கும் மேற்­பட்ட கடி­தங்கள் தபா­ல­கங்­க­ளிலும் அஞ்சல் பெட்­டி­க­ளிலும் தேக்­க­ம­டைந்­துள்­ளன.

நுவ­ரெ­லியா, கண்டி, காலி கோட்டை தபால் நிலைய கட்­டி­டங்­கை­ளயும் அதன் காணி­யி­னையும் இந்­தி­யா­வுக்கு வழங்­கு­வ­தற்கு அர­சாங்கம் நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­மைக்கு எதிர்ப்புத் தெரி­வித்தும், தபால் சேவை ஊழி­யர்கள் நீண்ட காலம்  எதிர்­கொள்ளும் நிர்­வாக ரீதி­யி­லான பிரச்­சி­னை­க­ளுக்கு உட­ன­டி­யாக தீர்வு முன்­வைக்க கோரியும் ஒன்­றி­ணைந்த தபால் சேவை தொழிற்­சங்க முன்­ன­ணியின் ஏற்­பாட்டில் தபால் சேவை  ஊழி­யர்கள் நேற்­று­முன்­தினம் நள்­ளி­ரவு முதல் இரு நாள் பணி பகிஷ்­க­ரிப்பில் இறங்­கி­யுள்­ளனர்.

நாடு பூரா­க­வு­முள்ள அறு­நூற்று ஐம்­பத்து மூன்று தபால் நிலை­யங்­களும் மூவா­யி­ரத்து நானூற்று பத்து உப தபால் நிலை­யங்­களும் நேற்று மூடப்­பட்­டி­ருந்­தன.

பணி பகிஷ்­க­ரிப்பு கார­ண­மாக கொழும்­பி­லி­ருந்து வெளி மாவட்­டங்­க­ளுக்கு அஞ்சல் கொண்டு செல்­லப்­ப­ட­வில்லை. அத்­துடன் வெளி மாவட்­டங்­க­ளி­லி­ருந்தும் கொழும்­புக்கு தபால்கள் கொண்டு வரப்­ப­ட­வில்லை. நட­மாடும் தபால் சேவை­களும் இடம்­பெ­ற­வில்லை.

கொழும்­பி­லுள்ள பிர­தான தபால் பரி­மாற்று நிலை­யத்தில் மாத்­திரம் மூன்று இலட்­சத்­திற்கும் அதி­க­மான கடி­தங்கள் தேக்­க­ம­டைந்­துள்­ளன. வெளி­நா­டு­க­ளி­லி­ருந்து கொண்­டு­வ­ரப்­பட்­டுள்ள அஞ்­சல்கள் விமான நிலை­யத்தில் தேக்­க­ம­டைந்­துள்­ளன.

இதே­வேளை தபால்,தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவ­கார அமைச்சர் ஹலீம் கொழும்­பி­லுள்ள பிர­தான அஞ்சல்  பரி­மாற்று நிலை­யத்­திற்குச் சென்று தொழிற்­சங்க பிர­தா­னி­க­ளிடம் பேச்­சு­வார்த்தை நடத்­தி­ய­போதும் பணி பகிஷ்­க­ரிப்பு கைவி­டப்­ப­ட­வில்லை.

இதே­வேளை சகல தரத்­தி­லு­முள்ள தபால் சேவை ஊழி­யர்­களின் விடு­முறை கடந்த 12 ஆம் திகதி நள்­ளி­ரவு  முதல் 14 ஆம் திகதி நள்­ளி­ரவு வரையில் இரத்து செய்­யப்­பட்­டுள்­ளதாக தபால் மா அதிபர்  நேற்று முன்­தினம் சுற்­று­நி­ரூபம் ஒன்றை வெளி­யிட்­டி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

அத்துடன் க.பொ.த. சாதாரண தரப்பரீட்சைக்கு தோற்றும் விண்ணப்ப முடிவுத் திகதி நாளை வியாழக்கிழமை என்பதால், தபால் சேவை ஊழியர்களின் பணி பகிஷ்கரிப்பு விண்ணப்பதாரிகளை நெருக்கடிக்குள்ளாக்கியதையும் அவதானிக்க முடிந்தது.