வடமாகாண அமைச்சர்கள் மீது முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் குறித்து விவாதிப்பதற்காக நடத்தப்பட்டுள்ள அமர்வுகளுக்கு 20 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.

வடமாகாண அமைச்சர்கள் மீது முன் வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்கான விசாரணைக்குழு அறிக்கை தொடர்பாக உறுப்பினர்களின் கருத்தறியும் சிறப்பு அமர்வு நடைபெற்று வருகிறது.

இதன்போது கருத்து தெரிவித்த அவைத் தலைவர் சீ.வி.கே. சிவஞானம் அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுக்கள் குறித்து ஆராய்வதற்காக 5 அமர்வுகளை நடத்துவதற்கு 20 இலட்சம் ரூபாய் செலவிடப்பட்டுள்ளது என கூறினார்.