ஸ்ரீலங்கன் விமான சேவை பாரிய நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போதும் இந்த விடயம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அரசாங்கம் ஆட்சி பொறுப்பினை ஏற்றுக்கொண்டதன் பின்னர் புதிய பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும், விமான சேவையின் அதிகாரிகள் நிறுவனத்தை இலாபம் ஈட்டக்கூடிய வகையில் வழிநடத்தத் தவறியுள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில், ஸ்ரீலங்கன் விமான சேவை 22 பில்லியன் ரூபா வரையில், நட்டத்தை எதிர்நோக்கியுள்ளதாக அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நிறுவனத்தை இலாபம் அடைய செய்வதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்ட போதிலும் அந்த முயற்சிகள் வெற்றியளிக்கவில்லை என அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.