பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால்த்துறை ஊழியர்கள் முன்னெடுக்கும் போராட்டம் வவுனியாவில் இன்று இரண்டாவது நாளாகவும் தொடர்கின்றது.

நிர்வாக ரீதியாக முகம் கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகள் வழங்கப்படாமைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், தபால் அலுவலகத்திற்காக கட்டப்பட்ட கட்டடத்தில் சுற்றுலா விடுதியை நடத்த தீர்மானித்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 48 மணிநேர பணி பகிஸ்கரிப்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

நேற்று முதல் தொடர்ந்து 48 மணிநேரம் பணிபகிஸ்கரிப்பில் ஊழியர்கள் ஈடுபடும் நிலையில் இதற்கான தீர்வு வழங்கப்படாத நிலையில் எதிர்வரும் 26ஆம் திகதியில் இருந்து தொடர் போராட்டமாக நடத்த தீர்மானித்துள்ளனர்.இதன் காரணமாக வவுனியா பிரதான தபால் நிலையம் உட்பட அனைத்து தபால் நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.

ஊழியர்கள் பணியில் இன்மையால் பல்வேறு தேவைகளுக்காகவும் தபால் நிலையங்களுக்கு வரும் மக்கள் சிரமத்தினை எதிர்நோக்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.