தனது 19ஆவது வயதில் இலங்கையில் உள்ள மிகவும் கஷ்டமான சிறைச்சாலையில் ஒன்றரை வருடங்களை கழித்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அண்மையில் அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,

கடந்த 1971 ஆம் ஆண்டு நடந்த ஜே.வி.பியின் புரட்சியில் ஏற்பட்ட வன்முறை சம்பவங்களுக்கும் தனக்கும் எந்த தொடர்புகளும் இல்லை என்றாலும் தன் மீது குற்றம் சுமத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த 1972 ஆம் ஆண்டு கையில் விலங்குடன் உயர் தரப்பரீட்சையை எழுதியதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.