கடல் நீரில் விளக்கெரியும் வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவம் வெகு சிறப்பாக நடைபெற்றது.

இதனையொட்டி வவுனியா இ.போ.சபையினரால் விஷேட போக்குவரத்துச் சேவைகளும் கடந்த கடந்த 12ஆம் திகதி அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த பொங்கல் உற்சவத்தினால் இ.போ.சபை வவுனியா சாலைக்கு சுமார் 17,59000 ரூபா வருமானம் கிடைக்கப்பெற்றதாக இ.போ.ச வவுனியா சாலை முகாமையாளர் முகமட் சாகிர் கூறியுள்ளார்.

இது தொடர்பாக மேலும் கருத்து தெரிவித்த சாலை முகாமையாளர்,

கடந்த 12ஆம் திகதி மற்றும் 13ஆம் திகதி வவுனியாவிலிருந்து வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலயத்திற்கு 41 இ.போ.ச பேருந்துகள் சேவையில் ஈடுபட்டன.

இதனால் எமது வவுனியா சாலைக்கு 12ஆம் திகதி 993000 ரூபா வருமானமும் 13ஆம் திகதி 766000 ரூபா வருமானமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.