இலங்கைக்கான மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயத்தினை மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் கடற்படை தளபதி அட்மிரல் மொஹமட் சாகவுல்லாஹ் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நேற்று சந்தித்துள்ளார்.

குறித்த சந்திப்பு நேற்று ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்தில் இடம்பெற்றதுடன் இலங்கை கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் ரவீந்திர விஜயகுணவர்தனவும் இதில் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையின் போது உதவிபொருட்களை அனுப்பிவைத்தமைக்காக ஜனாதிபதி இதன் போது நன்றி கூறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகிறது.

மேலும் இந்த சந்திப்பை நினைவுகூறும் வகையில் இருவருக்கும் இடையில் நினைவுச்சின்னங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டமை குறிப்பிடதக்கது.