தான் ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி மாளிகையில் தமிழ் மொழியில் வகுப்புகளை நடத்தியதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் அதிகளவில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ள முடிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

காலி, மாபலகம பகுதியில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.