கிளிநொச்சி – முல்லையடிப் பகுதியில் பல சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்ட குற்றச்சாட்டுக்காக கைது செய்யப்பட்ட சந்தேகநபரின் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேகநபரை மேலும் 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடிப் பகுதியில் வசித்து வந்த நபர் ஒருவர் பல சிறுவர்கள் மீது பாலியல் துஸ்பிரயோகம் மேற்கொண்டதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்த நிலையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் குறித்த சந்தேகநபரை இன்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றில் பதில் நீதவான் எஸ்.சிவபாலசுப்பிரமணியம் முன்னிலையில் பொலிஸார் ஆஜர்படுத்தியுள்ளனர்.

இதனையடுத்தே சந்தேகநபரை மேலும் எதிர்வரும் 28ஆம் திகதி வரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.