ஹூங்கம மற்றும் மகரகமை பிரதேசங்களில் உள்ள முஸ்லிம்களுக்கு சொந்தமான சில கடைகள் தீவைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நபர் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சந்தேகநபர் பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்பட்டு வருபவர் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

32 வயதான சந்தேகநபர் திருமணம் செய்து கொள்ளாதவர் எனவும் அவரது தந்தை மருத்துவர் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு வருடங்கள் இராணுவத்தில் சேவையாற்றியுள்ள இவர் தற்போது தெஹிவளையில் உள்ள உணவகம் ஒன்றில் தொழில் புரிந்து வந்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் பொதுபல சேனாவுடன் இணைந்து செயற்பட்டு வரும் அவர், அந்த அமைப்பு ஒழுங்கு செய்திருந்த பல நிகழ்ச்சிகளில் செயற்பாட்டு ரீதியான உறுப்பினராக இருந்துள்ளார்.

சந்தேகநபருக்கு நெருங்கிய தொடர்புள்ள பொதுபல சேனா அமைப்பின் நபர்கள் மற்றும் சில பிக்குமாரிடம் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தவுள்ளதாக பொலிஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள