இலங்கையர்கள் 201 பேருக்கு கடந்த ஒரு வருடத்தில் இஸ்ரேல் நாட்டில் தொழில் வாய்ப்புகள் கிடைத்துள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.

கடந்த 2016 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் 454 பேர் தொழில் நிமித்தம் இஸ்ரேல் புறப்பட்டுச் சென்றுள்ளனர்.

இஸ்ரேலில் தொழில் வாய்ப்பு பெற்ற 22 பேருக்கு வெளிநாட்டு வேலை வாய்ப்பு அமைச்சர் தலதா அத்துகோரள விமானப் பயண சீட்டுகளை அண்மையில் கையளித்துள்ளார்.

இங்கு உரையாற்றிய அமைச்சர் அத்துகோரள, தற்போதைய அரசாங்கம் இஸ்ரேலில் தொழில் வாய்ப்புகளை விரிவுப்படுத்தியுள்ளதால், இலங்கையர்களை அங்கு அனுப்பி வைக்க முடிந்துள்ளது எனக் கூறியுள்ளார்.

கடந்த வருடம் இஸ்ரேலுக்கு விஜயம் செய்து அங்கு உயர் அதிகாரிகளை சந்தித்து நடத்திய பேச்சுவார்த்தையின் பலனாக தொழில் வாய்ப்புகளை அதிகரிக்க முடிந்துள்ளது.

மேலும் தொழில் ஒப்பந்தம் முடிந்து இஸ்ரேலில் சட்டவிரோதமாக தங்கியிருக்கும் 59 பேருக்கு எதிராக தேவையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.