இரட்டை குடியுரிமைகளை கொண்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்களின் தகவல்களை வழங்குமாறு உதய கம்மன்பில விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்த தகவல்களை வழங்குவதற்கான நடவடிக்கைகளை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர்களின் முழுப் பெயர், பிறந்த திகதி, தேசிய அடையாள அட்டை இலக்கம் ஆகியவற்றுடன் கூடிய ஆவணத்தை வழங்குமாறு கோரி, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

தகவல் அறியும் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில், கடந்த மே மாதம் 8ஆம் திகதி குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்திடம் இந்த கோரிக்கையை விடுத்திருந்தார்.

இதன் அடிப்படையில், குறித்த திணைக்களத்தின் தகவல் அதிகாரி எம்.எல்.அசித நிரோஷனவின் கையெழுத்தில் நாடாளுமன்ற செயலாளருக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.