இலங்கையில் புகையிரதப்பாதையை அண்டிய பகுதி மற்றும் தண்டவாளத்தில் செல்பி எடுப்பது தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த தீர்மானத்தை இலங்கை புகையிரத திணைக்களம் எடுத்துள்ளது.

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் செல்பி எடுப்பதால் 22 பேர் புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான அனர்த்தங்களை தவிர்க்கவும் மற்றும் புகையிரத சேவையில் ஏற்படும் பாதிப்பை தவிர்க்கவுமே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.