வன்முறைகளை தூண்டும் நோக்கில் சிலர் மேற்கொள்ளும் ஆத்திரமூட்டும் கருத்துக்கள் உட்பட வன்முறைகளை கண்டிப்பதாக அமைச்சரவை தெரிவித்துள்ளது.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (14) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அமைச்சர் கயந்த கருணாதிலக்க இதனை கூறியுள்ளார்.

வன்முறை செயல்களுக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள், துரித நடவடிக்கையை எடுக்குமாறு சட்டத்தை அமுல்படுத்தும் அதிகாரிகள் மற்றும் சட்டமா அதிபருக்கும் ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

தவறான செயல்களுக்கு தண்டனை வழங்காமல் இருப்பதன் மூலம் நாடு மீண்டும் ஒரு போரை நோக்கி தள்ளப்படும் பயங்கரமான ஆபத்து காணப்படுகிறது.

எமது நாட்டில் ஒரு சிலர் இனங்களுக்கு மத்தியில் விரோதங்களை ஏற்படுத்த முயற்சித்து வருகின்றனர்.

இப்படியான நேரத்தில் அமைதி, சகவாழ்வின் முக்கியம் குறித்து சுட்டிக்காட்டியுள்ள சிவில் அமைப்புகள் மற்றும் மத தலைவர்களுக்கு நாங்கள் எமது நன்றிகளை தெரிவித்து கொள்கிறோம்.

சகவாழ்வு, உதவி, கௌரவம் மற்றும் கருணையை கௌதம புத்த பகவானின் கற்பிப்புகள் வலியுறுத்துகின்றன.

இந்த நாட்டை அமைதியான சகவாழ்வு, மனித பெறுமதி பாதுகாக்கும் மற்றும் பிராந்தியத்தில் மிகவும் முற்போக்கான மக்கள் வாழும் நாடாக மீண்டும் கட்டியெழுப்புவதற்காக நேர்மையாக பாடுபட தேவையான சமூகத்தை உருவாக்க தேவையான வழிகாட்டுதல்களை பௌத்தம், இந்து, இஸ்லாம் ஆகிய உலகின் சிரேஷ்ட மதங்கள் கற்பித்துள்ளதாகவும் அமைச்சர் கயந்த கருணாதிலக்க குறிப்பிட்டுள்ளார்.